Friday, June 3, 2011

சினிமா பார்ப்பது தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன?

சினிமாநாடகங்கள் இவை போன்றவைகளை பார்ப்பது தொடர் பான இஸ் லாமிய நிலைப்பாடு என்ன என்பதை பலர் கேட்டுக் கொண் டிருக்கின்றனர். இவற்றை ஒரு முஸ்லிம் பார்க்கச் செல்வது கூடுமா?அல்லது ஹராமாகுமா என்றும் கேட்கின் றனர்.
எவ்வித சந்தேகமுமின்றி சினி மாவும் அதனைப்போன்ற ஊட கங்களும் ஏனைய பொருட்களைப் போன்றே அதன் பயன் பாட்டைப் பொருத்து ஹராமா அல்லது ஹலாலா என தீர்மா னிக்கப்படுகின்றது. அதனை நன் மையான வழியில் பயன்படுத்தினால் அடிப்படையில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அதற்கான தீர்ப்பு ஏனைய விடயங்களைப் போன்றே அமையும். ஆனால்அதனை தீய வழியில் பயன்படுத்தினால் அது ஹராமானதாக அமைந்து விடும்
.
நாங்கள் சினிமாவை இவ்வாறு நோக்குவோம். அது பின்வரும் நிபந்தனை களை கொண்டிருந் தால் அது ஹலாலாக அமையும்.
1. அதன் தலைப்புகளும் அது உள்ளடக்கியுள்ள விடயங்களும் பாவத்தையும் மோசமானவற்றையும் விட்டு தூய்மையாக இருப்ப தோடு இஸ்லாமிய அகீதாவிற்கும் ஷரீஆவிற்கும் ஒழுக்கங்களுக்கும் முரண்படாததாக இருக்க வேண்டும். உலக ஆசைகளைத் தூண்டுகின்ற அல்லது பாவத்தைத் தூண்டுகின்ற அல்லது குற்றம் செய்யத் தூண்டுகின்ற அல்லது வழிகெட்ட சிந்தனைகளின்பால் அழைக்கின்ற அல்லது மோச மான நம்பிக்கைகளின்பால் தூண்டுகின்ற இவைபோன்ற நாம் அறிந்த விடயங்களைக் கொண்ட சினிமாக் களைப் பொறுத்தவரையில் அவை ஹராமானதாகும். அவற்றைப் பார்ப்பதோபார்க்கத் தூண்டுவதோ ஒரு முஸ்லிமுக்கு ஹராமானதாகும். ஏன் அத்தகைய வற்றைத் தயாரிப்பதும் அவற்றில் பங்கெடுப்பதும்கூட ஹராமானது தான்.
2. அவை மார்க்கக் கடமை யொன்றையோ உலகக் கடமை யொன்றையோ பொடுபோக் காக்கிவிடக்கூடாது. குறிப்பாக அல்லாஹுதஆலா முஸ்லிமின் மீது கடமையாக்கியுள்ள தொழுகைகளைவிட்டும் அது பொடு போக்காக் கிவிடக்கூடாது. ஒரு முஸ்லிமுக்கு மஹ்ரிப் தொழுகை போன்ற ஒரு தொழு கையை சினிமா பார்ப்பதற்காக பிற்படுத்த முடியாது. அல்லாஹுதஆலா கூறு கின்றான்தொழுகையாளிகளுக்கு கேடுதான்அவர்கள் தமது தொழு கைக ளில் பொடுபோக்காக இருக் கின்றனர்.
அத்துடன் அது தொழுகையை மறக்கடிக்கச் செய்துவிடவும் கூடாது. அத னால்தொழுகையின் நேரம் கடந்துவிடும். இதனை அல்குர்ஆன்மதுவையும் சூதாட்டத்தையும் தடுக்கின்றபோது ஒரே வார்த்தையில் கூறிவிட்டது. அதா வது அவை அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதைவிட்டும் தொழு கையை விட்டும் தடுத்துவிடு கிறது.
3. இவ்வாறான ஆகுமாக்கப் பட்ட சினிமாக்களைப் பார்க்க செல்வோரும் அஜ்னபியான ஆண்பெண்களுடன் கலந்துவிடக் கூடாது. ஏனெனில்அத னால் குழப்பமும் பாவங்களுக்கான அடிப்படையும் இடப்பட்டு விடும். குறிப்பாக இவ்வாறான நிகழ்வுகளின்போது கருப்புத் திரையொன்று போடப்பட வேண் டும். இமாம் தபரானிபைஹகி ஆகியோர் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளனர்நீங்கள் உங்களுக்கு ஹலாலாக்கப்படாத ஒரு பெண்ணை தொடுவதை விடவும் உங்கள் தலையில் இரும் பொன்றை அடித்துக் கொள்வது சிறந்ததாகும்.
கேள்விகேட்ட சகோதரருக்கு பின்வரும் விடயத்தை கூறிக் கொள்ள விரும்பு கின்றேன். இன்று காணப்படுகின்ற சினிமாக்கள் இத்தகைய எந்தவொழுக் கங்களையும் மதிப்பதில்லை. மாற்றமாக பாவங்களை செய் வதற்கும் நேரத்தைக் கொலை செய்வதற்குமே அடிப்படையாக அமைகின்றது.
ஹலால் தெளிவானதுஹரா மும் தெளிவானது. இன்று எல்லா வீடுகளிலும் நவீன தொடர்பாடல் சாதனங்களின் வசதியால் இத் தகைய விடயங்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சினிமாக்களில் நாடகங்களில் நடிப்பவர்களும் எவ்வித கண்ணியத்தையும் கொண் டிருப்பதில்லை.
அல்லாஹுத்தஆலாவிடம் எங்களுடைய மார்க்கத்தையும் எங்களுடைய உலக வாழ்வையும் பாதுகாக்குமாறு பிரார்த்திக்கின் றேன். அல்லாஹுதஆலா உதவி செய்பவன் அவனே மிகவும் அறிந் தவன்.
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த பத்வா சினிமா பார்ப்பதை அங்கீகரிக்கின் றதென எவரும் கருதத் தேவையில்லை. இன்றைய சினிமாக்களில் 95% இற் கும் மேற்பட்டவை மேற்குறித்த எந்தவரை யறைகளையும் பொருட்படுத்தா தவை. எனவே,அவற்றைப் பார்ப்பதோ ஏனையவர்கள் பார்ப்பதற்குத் தூண்டு வதோ ஹராமானதாகும் என்பதையே இந்த பத்வா தெளிவுபடுத்துகின்றது.

இணையத்தளம் மூலம் ஆணும் பெண்ணும் உரையாடலாமா?

ஆணும் பெண்ணும் இன்டர்நெட் மூலமாக வரையறைகளைப் பேணி உரை யாடலாமா? (CHAT)

அல்லாஹுத்தஆலா ஷைத்தானின் சுவடுகளை பின்பற்றுவதை தடை செய்துள்ளான் என்பதை நாம் அறிந்ததே. ஹராத்தில் விழக் கூடியஹராத் திற்கு இட்டுச் செல்லக்கூடிய அனைத்தும் தடுக் கப்பட்டுள்ளது. சிலவேளைஅதன் அடிப்படை ஆகுமாக இருந்தாலும்கூட. இதனை உல மாக்கள் தீமை யைத் தடுப்பதற் கான அடிப்படை என கூறுகின்றனர்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்விசுவாசம் கொண்டோரே நீங்கள் ஷைத் தானின் சுவடுகளை பின்பற்ற வேண்டாம். (நூர்: 21) நீங்கள் அல்லாஹ்வை அன்றி ஏனையவற்றை வணங்குவோரை ஏச வேண்டாம். அவர்கள் எவ் வித அறிவுமின்றி அல்லாஹ்வை ஏசுவார்கள். (அன்ஆம்: 108)
இந்த வசனத்தில் அல்லாஹுத் தஆலா முஃமின்களை இணை வைப்பாளர் களை ஏசுவதைவிட்டு தடுத்திருக்கின்றான். ஏனெனில்அதன்மூலம் அந்த இணைவைப் பாளர்கள் தூய்மையான இரட்சகனைஅல்லாஹ்வை ஏசுவார் கள்.
இந்த அடிப்படைக்கான நிறைய உதாரணங்கள் ஷரீஆவில் காணப்படுகின்றன. எங்களுடைய இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் அதாவதுஒரு ஆணும் பெண்ணும் வரையறைகளோடு பேசுவது அல்லது எழுத்தின் மூலம் தொடர்புகொள்வது ஆகு மானதாகும். என்றாலும்அது ஷைத்தானின் வலையில் விழுந்து விடுவதற்கு காரணமாக அமைந்து விடலாம்.
யார் தனது உள்ளத்தில் பலவீ னத்தை காண்கின்றாரோ தான் ஷைத்தானின் வலையில் விழுந்து விடுவேன் என்று அஞ்சுகின் றாரோ அவர் இவ்வாறு பேசுவது கூடாது. அவர் தன்னைப் பாது காத்துக் கொள்ளவேண்டும். யார் தனது உள்ளத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கின் றாரோ அத்தகை யவர் பின்வரும் நிபந்தனைகளுடன் உரையாட லாம் என்று எமக்குக் கூற லாம்.
1. குறித்த விடயத்திற்கு அப்பால் அதிகமாகப் பேசுவதை தவிர்ந்துகொள்ளல். (தஃவா விடயம்அல்லது ஏனைய விட யங்கள்)
2. குரலை மென்மைப்படுத்து வதை அல்லது நளினமாகப் பேசுவதைத் தவிர்த்தல்.
3. தனிப்பட்ட விடயங்கள் தொடர் பாக கேள்வி கேட்காதிருத்தல்உதாரணமாக வயதுஉயரம்வசிப்பிடம் போன்றவற்றைக் கூறலாம்.
4. பேசும்போது அல்லது எழு தும்போது ஆணாக இருந்தால் சகோதரர்கள் யாரேனும் பெண் ணாக இருந்தால் சகோதரிகள் யாரேனும் இருப்பது சிறந்த தாகும்.
5. உள்ளம் இச்சையின்பால் செல் வதை உணர்ந்தால் உடனடி யாக உரையாடலை நிறுத்தி விட வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அஷ்ஷெய்க்
அப்துல் ஹை யூஸுப்

Monday, May 2, 2011

Did Osama Bin laden Died ?????????????

Whether the information about Osama Bin laden is true or not. Ya Allah You are the great and you are the best.Accept his good deeds :'( . He sacrificed his life for u.He might did mistakes.but you are the best to forgive him.Plz accept him for deenul Islam.aameen

Friday, April 29, 2011

ப‌டிக்க‌ ம‌ற‌க்காதீங்க‌...


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"
"அதில்லை..."
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"
"இல்லை"
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.


"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா? 




மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"




"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.


சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

தொலைபேசியும் முஸ்லிம் பெண்களும்



முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம்
சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர்
கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம்
காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம்
பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும்
நிகழ்ந்து வருகின்றது.

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன்
போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன
எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை
கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.
வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி
அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி

செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம்
வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ
அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை
தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய
ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த
உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக்
கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்)
பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான
நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள்
நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை
கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச்
சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த
சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது
சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து
வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும்
பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு
(அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம்
மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச்
செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக்
கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர்,
கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும்
யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது
உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச்
செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த
தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ
முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள்

Sunday, April 24, 2011

எங்கே செல்கிறாய்? (Poem)

எங்கே செல்கிறாய்?

மடிந்து விழுந்து நெழிந்து தவழ்ந்து புரண்டு விரைந்து
சிதறும் புணலில்...
இடிந்து குழைந்து அழிந்து விழுந்து விரண்டு மறைந்த பதராய்…
எழுந்து விளைந்து குவிந்து அலைந்து திரண்டு ஒளிர்ந்த
படரும் சுடரில்...
ஒடிந்து தளர்ந்து குணிந்து வளைந்து மிரண்டு அழிந்த சிறகாய்…

நீ… எங்கே செல்கிறாய்?

அம்மா வாசைப் பௌணர்மியாய்
ஆழிப் பேரலை அகிம்சையாய்
இம்மையின் மறுமையாய்
ஈராக்கின் அமைதியாய்…

நீ… எங்கே செல்கிறாய்?

இறக்கப் பிறந்த நீ…
பறக்க நினைத்தாய்!
உயரப் பறக்க
சிறகை ஒடித்தாய்!

நீ… எங்கே செல்கிறாய்?

ஒரு நாள் நீ வல்லரசு!
இன்னாள்…இல்லை…
உக்கில்லை ஓர் அரசு!
நீ சொன்னாய்… பரவாயில்லை…
இன்று நான் நான் அல்ல…
இன்று நான் நாம்!
ஐம்பது, ஐம்பது சிற்றரசு! பெரிசு…ஐம்பதா ஒன்றா? ஐம்பது…

நான் புதுப்பாவை… எனக்கேன் பொல்லாப்பு?
பேரரசு பெருமைக்கா?
போர் செய்ய முட்டாளா?

தேசியம் தேனாக…
ஜன நாயகம் பாலாக…
கபிடலிஸம் மதுக்கோப்பை!
கொம்யூனிஸம் விலைமாது!
இஸ்லாம் இருக்கட்டும்…அழையா விருந்தாளி!
மொடர்ண் இஸ்லாம்…
ஆஹா… உல்லாசம்!


நீ பாவை அல்ல – அப்பாவி
இல்லை - நீ பாவி!
மேற்குலகின் காலனி…

அண்ணார் என்றான்- ஐரோப்பா
அவனிடமிருந்ததோ இராட்சத சிலந்தி வலை
பலம் அல்ல – வெறும் பிரமாண்டம்

ஏமாந்தாய்…அண்ணார்ந்தாய் - கொக்கின் கழுத்து கட்டையானது அண்ணார்ந்தாய் - அவனை(அல்லாஹ்வை) அழைக்கவல்ல
அன்னியனை அரவணைக்க!

நீ… எங்கே செல்கிறாய்?

விடுதலை என் முற்றம்
சுதந்திரம் என் கொல்லை
அதில் வீடு உலகாயதம்
பெண்ணாட்டி அமெரிக்கா!
வைப்பாட்டி ஐரோப்பா!
விளையாட இஸ்ரவேலு…
வாரிசு டொமோகரசி!
வழக்கென்றால் ஐயன்னா நாவன்னா…
இதுதானே உன் உலகம்…

நீ… எங்கே செல்கிறாய்?

மின்னல் மிலேனியத்தில் மில்லத்துந் இம்ராஹீமா…
ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா?
குர்ஆனும் ஏடுதானே!
ச்ச்சும்மா வாசிக்க வைத்திருப்போம்…
அதில் பூஜிக்க ஒன்றுமில்லை…
இதுதானே உன் கொள்கை…

நீ… எங்கே செல்கிறாய்?
அக்ஸா அலுப்பென்றால் கஃபாவை கைமாற்றுவோம்!
விசுவாசியின் குருதி அதை விட மேலானது…
அதையே ஓட்டி விட்டோம்…
இது என்ன கல்தானே…
இதுதானே உன் தீர்வு

 நீ… எங்கே செல்கிறாய்?

மறுமையா மண்ணாங்கட்டி…
இதுதான்(இம்மை) உள்ளங்கை நெல்லிக்கனி!
கேள்வியா கணக்கா…ஐய்யோ… ஐய்யோ
நாளைக்கு பிளைப்பைப் பாரப்பா…
இதுதானே உன் வாதம்

நீ… எங்கே செல்கிறாய்?

நில்… நில்…அக்கினிப்பிளம்பொன்றில் அகோரமாய் ஓர் காட்சி!

கருகிக் கருகிக் கதறிக் கதறி ஓர் ஓசை!

அதோ…அதோ அது பிர்அவ்னா?

இல்லை அது ஹாமான்…

இல்லை நம்ரூத்… ஐய்யோ அல்ல அது ஜஹ்ல்…

அபு ஜஹ்ல்…

நீ… எங்கே செல்கிறாய்?

Friday, April 22, 2011

மரணம் ஒரு பக்கத்து நண்பன்...

    என்னதான் உறுதியாக நம்பியிருந்தாலும் மரணம் அடிக்கடி மறந்தே போகிறது... மையத்து வீடுகளில் முழுக் கபனில் முகம் மட்டும் பார்க்கும் போதும் மையவாடியில் கபுருகளுக்கு மத்தியிலிருக்கும் போதும் ஏற்படும் உணர்வு, வாழ்க்கையில் அன்றாட வீதிகளில் நடக்கும் போதும் ஏனோ தொலைந்துவிடுகிறது.




இருட்டு பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் படர்ந்த நிலவற்ற பொழுதொன்றில் மண்ணறைக்கு முன்னால் நின்றபோதுதான் தொடை நடுங்கத் தொடங்கியது...

இந்த மரணம் எல்லாக் கனவுகளையும் பறித்துக்கொள்ளும்... எல்லா நிம்மதிகளையும், ஆடம்பரங்களையும் மண்ணோடு சேர்த்துப் புதைத்துக் கொள்ளும்... இந்தப் பூமியின் மொத்த அழகிலிருந்தும் அழைத்துச் சேன்று ஒரு கருப்புக் குழிக்குள் வைத்துவிடும் என்பது புரிந்தது.

எவ்வளவுதான் திரும்பிப் பார்த்தாலும் மரணம் ஒரு சொட்டாவது தெரிவதில்லை. நம் நிழல்களுக்குள் பிணைந்து அது சதாவும் நம்மைத் துரத்துகிறது. எம் எல்லாத் தெருக்களிலும் நம்மோடு சேர்ந்து அதுவும் சமாந்தரமாக நடக்கிறது. ஆத்ம நண்பன் போல் பக்கத்திலே அமர்ந்திருக்கிறது. நிழல் மாதிரி கூடவே வந்தாலும் வேண்டாத பொழுதொன்றில் அது அழைத்துக் கொண்டு தான் போகப் போகிறது.
நினைக்க நினைக்க மனது நடுங்குகிறது. மலக்குல்மௌத் உயிரைப் பித்தெடுக்கும் நாளில் ஏற்படப் போகும் வலியின் கனதி உலகிலுள்ள எந்த நோவுக்கும் ஈடாகாது. வலிக்க வலிக்க... கதறக் கதற... அவர் உயிரை பித்துக் கொண்டு போவார்... சிறுபிள்ளையெனக் கெஞ்சினாலும் அவர் விடவா போகிறார்...? சின்னச் சின்னக் கத்திகள் கொண்டு உடல் முழுக்க யாரோ கீறுவது போல் இருக்கிறது. இந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை இதுவரையாரும் சோல்லவில்லை.

இந்த வாழ்க்கைக்குப் பிரியாவிடை கொடுப்பது ஓர் அழகிய நிகழ்வுதான். படைத்தவனின் மகிமை இங்குதான் புரிகிறது.

குளிப்பாட்டி... ஆடைஅணிவித்து... தொழுகை நடத்தி... பாவங்களுக்காப் பிரார்த்தித்து... சில சோட்டுக் கண்ணீர்களோடு இதுவரையில் மெத்தையில் இருந்தவனை மண்தரையில் வைத்து மண்ணால் மூடிவிட்டு வருகின்ற காட்சி பிறப்பைவிடவும் அழகாத்தான் தெரிகிறது. பிறந்தபோது சிரித்து மகிழ்ந்த அதே முகங்களில் கண்ணீரும், கவலையும். சிலபோது புரிகிறது சோகமும் ஒருவகை அழகுதானென.

இருப்பினும் புதைகுழிக்குள் படுவது வேதனைதான் அதில் எந்தச் சுகமும் இருக்கப்போவதில்லை. அங்கு படுகின்ற ஒரு துளி வேதனையாவது வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்பதில்லையே...! அந்தக் கொடூர நிகழ்வை எப்போது நினைத்தாலும் விழிகளின் தொங்களிலிருந்தும் கண்ணீர்த் துளிகள் உருண்டு வருகின்றன. என்ன சேய... பிறந்தவனெல்லாம் இறந்துதானே ஆக வேண்டும் என்ற நினைப்பில் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது...

இதிலென்ன வேறுபாடு இருக்கிறது. ஒருவன் வாழப் பிறப்பது போல இறப்பும் இன்னொரு வாழ்க்கைக்கான பிறப்புத்தானே. மரணமென்றும் இறப்பென்றும் அழைக்கின்றோம் பெயர்மட்டும் வித்தியாசம். பிறப்பு போல இறப்பும் கொண்டாடக்கூடிய ஒன்றுதான்.. ஏனெனில் அது வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கான இடமாற்றம்.
அது ஒரு முடிவற்ற வாழ்க்கை... எந்தக் கனவுகளையும் கைகளில் ஏந்திக் கொண்டு துயரமில்லாமல் நடக்கலாம்.
ஆனால்ஒன்று, நினைத்தமாதிரி அந்த வாழ்க்கை கிடைப்பதில்லை. போட்டியில் வெற்றி பெறாமல் பரிசு கிடைக்காது. இந்த வாழ்க்கையின் வெற்றியில் தான் மறுமையின் மொத்த நிம்மதியும் தங்கியிருக்கிறது. சுவனம், நரகம் இரண்டிற்குமான பாதையை இறைவன் சொல்லித்தான் தந்திருக்கிறான். நாம் நடப்பதைப் பொருத்து வெற்றியோ தோல்வியோ எழுதப்படுகிறது. படைத்த இறைவனுக்குப் பிடித்தமாதிரி வாழ்பவனுக்கு வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஒரு புதிய தொடக்கமா இருக்கும்.. இல்லாதவனுக்கு அது ஒரு கருப்புப் பக்கமாக இருக்கும்.

மரணம் ஒவ்வொருவரினதும் நெருங்கிய பக்கத்து நண்பன்தான் எப்போதாவது அவன் நிச்சயம் அழைப்பான். அப்போது அந்த அழைப்பை எம்மால் புறக்கணிக்க முடியாமல் இருக்கும். எல்லாக் கனவுகளையும் வைத்து விட்டுப் பிரியவேண்டியதுதான்.

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்


மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள்  இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.
ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப்  பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத  இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.
இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!
"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர.

இந்த வாழ்க்கை பற்றி...




இந்த வாழ்க்கை பற்றி நினைக்கும்போதே அதன் வசீகரம்தான் மேலெழுகிறது. அன்புள்ள வாழ்க்கை என்பது எவ்வளவு இனிமையானது. எத்தனை வசீ கரங்கள், வசந்தங்கள்... பூக்கள் நிறைந்த சோலை மாதிரி பார்க்கப் பார்க்க அழகாகத்தான்  இருக்கிறது இந்த வாழ்க்கை.
 
ஒரு குழந்தை பிறத்தல் என்பது எவ்வளவு கொண்டாட்டத்திற்குரியது. அது அணை கடந்த மகிழ்ச்சியை எல்லோர் மனதிலும் பரவச் செய்கிறது. அப்போது தாயும் தந்தையும் அடையும் மகிழ்ச்சி இந்தப் பிரபஞ்சத்தையே தழுவி நிற்கி றது. உயரப் பறக்கும் ஒரு பறவையின் குதூகலத்தோடு மனது சிறகடிக்கும் தருணமது.
ஒரு விளக்கு எத்தனை பேருக்கு வெளிச்சம் கொடுக்கிறது. அது போலத் தான் ஒரு ஜனனமும். அதன் வருகை யில் எல்லோரும் மகிழ்கிறார்கள்.

இந்தப் பூமியில் இன்னும் வாழாத ஒரு வாழ்க்கைக்காக அது பிறக்கிறது. எல் லையற்ற கற்பனைக ளுடனும் சாத்தி யங்களுடனும் அது வளர்கிறது. பின் இந்த வாழ்க்கையின் வசீகரங்களில் அது தொலைந்து விடுகிறது.

இந்த வாழ்க்கை எல்லையற்ற துன்பத்தை வைத்திருப்பதுபோலவே எல்லை யற்ற மகிழ்ச்சியையும் வைத்திருக்கிறது. ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு மகிழ்ச்சியை அது தருகிறது. குழந்தைப் பருவத்து மகிழ்ச்சியை யாரும் மறப்ப தில்லை. இன்னுமொரு முறை அந்த வாழ்வை வாழவே எல்லோரும் விரும்பு கிறார்கள். ஏனெனில், குழந்தைகளை யாரும் மறுப்பதில்லை. அவர்களை எல் லோரும் அங்கீகரிக்கிறார்கள். இருந்தாலும் அந்த அங்கீகாரம் பெரியவனாகும் போது கிடைப்பதில்லை.

இளமை இன்னுமொரு வசீகரம். காலை வெயில் மாதிரி தெம்புடன் கூடிய பருவமது. ஒவ்வொருத் தரும் அதில் ஒவ்வொரு மகிழ்ச்சியை அனுபவிக்கி றார்கள். ஏன், இளமையே வசீகரம்தானே!

முதுமையிலும் வசீகரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் அதில் ஒரு பலவீனம் வந்து அமர்ந்துவிடுகிறது. எல்லா வசீகரங்களையும் அது காவு கொண்டுவிடுகிறது.

 
குழந்தைப் பருவமும் முதுமைப்பருவமும் இன்னுமொருவரில் தங்கியிருக்க வேண்டிய சுமையை தோற்றுவித்துவிடுகிறது. எனவேதான் எல்லோரும் முதுமைக்கு அஞ்சுகிறார்கள். சுடுகாட்டுக்கு நடந்து போக சக்தியிருக்கும் போதே செத்துப்போகவேண்டும்என்று ஒரு கவிஞன் பிரார்த்தித்தது நினை வுக்கு வருகிறது. 


ஒரு குழந்தையை கொஞ்சுவதுபோல எந்த முதியவரையும் யாரும் கொஞ்சு வதில்லை. வயோதிபமும் ஒரு குழந்தைத்தனம்தான். இருப்பினும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை. அவர் தன் எல்லா மகிழ்ச்சிகளையும் தன் நடுக்கத்திலேயே தொலைத்து விடுகிறார். மண்ணறையை அருகாமையில் இருப்பதாக கனவுகாணத் தொடங்குகிறார்.

இப்படி முப்பருவங்களைக் கொண்ட இந்த வாழ்க்கை பற்றி எழுத நினைக்கும் போது அதன் ஆனந்தமே மேலெழுகிறது. ஒரு மழைத்துளி தரும் ஆசுவாசம் போல, ஒரு தென்றல் தரும் இதம்போல, இந்த வாழ்க்கை இன்பமானதுதான்.

ஆனால், இந்த இன்பம் முடிந்துபோகும் என்பது தான் இந்த வாழ்க்கை பற்றி நாம் படிக்க மறந்த குறிப்பாகும். அன்று பள்ளிவாயலில் ஒரு வயோதிப ரைப் பார்த்தேன். அவரது முகத்தில் மரணத்தின் ரேகைகள் படிந்திருந்தன. அவர் அமைதியாக அல்குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார். தனது வாழ்க்கையின் அந்திமத்தில் இருக்கும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். எல்லா நாளும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக் கின்றன. வாழ்க்கைப் பாடத்தை நிறுத்திவிட்டு யாரோ ஒருவர் வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறார்.

மறுபடியும் இந்த வாழ்க்கை பற்றி நினைக்கும் போது ஆனந்தமே மேலெழுகி றது. ஏனெனில், இந்த வாழ்க்கையின் புறஅழகில் நாம் வீழ்ந்துபோயிருக்கின் றோம். நினைவுக்கெட்டிய காலத்திலிருந்தே எல்லோரும் மகிழ்ச்சிகளை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். வாழ்க்கையின் இன்பமான பொழுதுகளை அடிக் கடி நினைவுபடுத்துகிறார்கள். ஒரு விருந்தில் அமர்ந்துகொண்டு அதனை மீட் டிப் பார்க்கிறார்கள். தம் மகிழ்ச்சிகளுக்கு வெற்றிகளுக்கு விழா எடுக்கிறார்கள்.

இந்த வாழ்க்கை இன்னும் சிலருக்கு சொர்க்கத் தையே கொடுத்திருக்கிறது. வாழ்க்கைபற்றிய கனவுகளில் அவர்கள் மிதந்து கொண்டிருக்கி றார்கள். இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு தரு ணத்தையும் இன்பமாக வாழ முயற்சிக்கிறார் கள்.

இன்னும் சிலருக்கு இந்த வாழ்க்கை சோகத் தையே கொடுத்திருக்கின்றது. எப்போதும் அவர் கள் கன்னத்தில் கைவைத்து அமர்ந்து கொண்டி ருப்பார்கள். இந்த வாழ்க்கையை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை தமக்கு இன் பத்தைக் கொடுக்கவில்லையென்று நொந்து கொள்கிறார்கள்.

இந்த வாழ்க்கை பற்றி சிந்திக்கும்போது நாம் இந்த வாழ்க்கை முடிந்துபோகும் என்று ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. அதனது ஆனந்தங்களை மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், இந்த வாழ்க்கை முடிந்து அதற்குப் பின்னால் இருக்கும் வாழ்வின் இன்பம் பற்றி சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள்.

முடிந்துபோகும் வாழ்க்கையை முடிந்தமட்டும் இன்பமாக வாழவே நாம் முயன்றுகொண்டிருக்கிறோம். அதுபற்றியே சதா சிந்தித்துக்கொண்டிருக்கி றோம்.

என்னதான் ஆட்டம்போட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த வாழ்க்கையிலி ருந்து விடைபெற்றுத்தானே ஆகவேண்டும். அந்த நிஜம் நம் சிந்தனையை ஒரு போதும் களைப்பதே இல்லை. இந்த வாழ்க்கைக்கு விடைகொடுக்க நாம் ஒருபோதும் ஆயத்தமாகவே இல்லை.

வாழ்க்கையின் பெறுமானத்தையும் யதார்த்தத்தையும் உணராதவன் இந்த வாழ்க்கையை அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். உணர்ந்தவனோ அதனைக் கால்களுக்குக் கீழே வைத்துவிட்டு முடிவில்லாத ஒரு வாழ்க் கைக்கு தயாராகிறான்.

ஒரு குழந்தைக்கு இந்த உலகில் இன்பத்தைச் சொல்லிக் கொடுப்பதுபோல இந்த உலகம் முடியும் என்பதனையும் அதன்பின் ஒரு வாழ்வு இருக்கிறது என்பதனையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த வாழ்க்கையின் வசீ கரங்களை மட்டும் அதற்குப் போதித்துவிடக் கூடாது. இந்த யதார்த்தம் புரியும் போதுதான் யாரினது மரணத்தையும் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.

இனி இந்த வாழ்க்கை பற்றிச் சிந்திக்கும்போது அது முடியும் என்பதும், இந்த வானம், இந்த அந்தி எல்லாமே அழியும் என்பதும் நம் நினைவுக்கு வரட்டும். அதற்காக யாரும் மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொள்ளத் தேவையில்லை. சந்தோஷம் மட்டுமல்ல வாழ்க்கை என்பது மறக்காமல் எம் நினைவில் இருந்தால் போதும்.


(2011 மார்ச் 'வைகறை' இதழில் வெளியானத

உனக்காக அழுகிறேன்...

உனக்காக அழுகிறேன்...






இருந்தாலும்... இருந்தாலும்... என்று சொல்லிப் பாருங்கள். உங்களாலும் அழா மல் இருக்க முடியாது என்று ஒருமுறை வாசித்தது நினைவில் இருக்கிறது. உண்மைதான், சொல்லிப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது. அந்த ஒற்றை வரியின் முடிவில் உள்ள மௌனம் அதற்கு முன்னால் உள்ள ஏராளமான வார்த்தைகளை, நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கின்றது.


நீ மிகத் தூய்மையானவன், நீ எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லைஎன்று சொல்லி மலக்குகள் மண்டியிட்டபோதே மனிதன் மகத்துவம் பெற்றுவிட்டான். அந்த நீல நிற வானவெளியும் பரந்து விரிந்த பூமியும் மனிதனுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு மகத்தான ஏற்பாடுகளோடு அல்லாஹ் மனிதனை இந்த உலகில் வாழவைத்திருக்கின்றான்!


இந்த வாழ்க்கைக்கான மிகச் சரியான அர்த்தத்தை நாம் எழுதிக் கொண்டி ருக்கிறோமா அல்லது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோமா என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க்கைப் பாதை எம்மில் அநேகருக்கு கிறுக்கலாகத்தான் காட்சி தருகின்றது.


எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்து இறந்து போயி ருக்கின்றார்கள்... வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்... இன்னும் வாழ் வார்கள்... இறப்பார்கள்... ஆனால், மிகச்சிலர் தான் வாழ்வின் சரியான அர்த்தத்தை அடைந்து கொள்கிறார்கள்.


மேல் மாடிகளில் இருந்து மாநகர வீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எறும்புக் கூட்டங்கள் போல வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். அவற்றின் நகர்வுகளில் வாழ்க்கையும் நகர்வது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணங்கள். பாதைகள் முடிந்தாலும் இந்த உலகில் பயணங்கள் முடிவதில்லை போலிருக்கிறது.


தன் வாழ்வில் ஆயிரம் சோலிகளை மனிதன் தன் தலைக்குள் வைத்துக் கொண்டுதான் அலைகிறான். அவைகளை முடித்துவிட்டு யாரும் மரணிப்ப தில்லை. தன் வாழ்க்கையின் பாதி அலைச்சலை வைத்து விட்டுத்தான் மனி தன் இறந்து போகிறான்.


தனக்கு எல்லா வசதிகளும் கைகூடி வந்ததன் பிறகு மிகச் சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனி தன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ எவருக்கும் இந்த உலகில் வாழ்க்கை எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழ்க்கையும். அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துதான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது.


தனக்குத் துக்கம் நிகழும் போது மட்டும்தான் மனிதன் இறைவனை நினைக்கி றான், அழுகிறான். அப்போதுதான் தன்னைப் படைத்தவனை அவன் உண்மையாக நெருங்குகின்றான். மாறாக, அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனை மறந்து தன் சந்தோசச் சாளரங்களைத் திறந்து கொண்டிருக்கிறான்.



அதனால்தான் என்னவோ இறைவனை மனிதன் மறக்கக் கூடாது என்பதற் காக எல்லோரிலும் அவன் ஏதோ ஒரு குறையை வைத்திருக்கிறான். இல்லையென்றால் இந்த உலகில் மனிதர்கள் கடவுளையே மறந்துவிடுவார் கள்.


மகிழ்ச்சி, துக்கம் என இரண்டிலும் நினைவுக்கு வர வேண்டியது படைத்த இறைவன்தான். அவன் நினைவில் அமிழ்வதும், அழிவதும் ஒன்றுதான். எல்லா உறவுகளை விடவும் நெருக்கமாக இருப்பது நித்திய அல்லாஹ்வின் உறவு மட்டும்தான். ஏனைய எல்லா உறவுகளும் விலகக் கூடியது, முறியக் கூடியது.
எல்லோருமே அவனுடனான உறவில் இடைவெளிகளை விட்டுத்தான் இருக் கின்றோம். நிறை வான அவனது அன்பைப் புறக்கணித்துவிட்டு யாரிடமோ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.


மனித உறவுகளின்போது நாம் எல்லோருமே எமது நன்றிகளை சக மனிதர் களுக்கு வெளிப்படுத்துகின்றோம். எமக்கு உதவியவர்களை பக்குவமாய் நினைவில் வைத்துக் கொள்கிறோம். பிரதியீடுகளை வழங்குகிறோம். பரஸ் பரம் நேசம் வைக்கிறோம்.


ஆனால், மலக்குமார்களை எமக்கு சிரம்பணிய வைத்து எம்மை கௌரவப் படுத்தியவனை மறந்து விட்டு நிற்கிறோம். அவன் எத்தனை அருள்களை நிஃமத்துக்களை எமக்கு நிரப்பமாகத் தந்திருக்கிறான்! வைத்தியசாலைகளுக் குச் சென்று பார்க்கும் போதுதான் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள நிஃமத்துக்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அப்போதுதான் நம் ஈமானை நாம் முதன்முறையாகத் தொட்டு பார்க்கிறோம்.


அது கனக்கும்போது நாம் உண்மையாக அழுகிறோம். எத்தனை வகையான நோய்களிலிருந்து அவன் எம்மை பாதுகாத்திருக்கிறான். இறைவனே! உனக்கே புகழ் எல்லாம்!


மனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் அருளும் அவன்மீது காட்டும் அன் பும் எவ்வளவு விசாலமானது. வானைக் கூட சிலவேளை அளந்து முடித்தா லும் அவன் அன்பை எம்மால் அளவிட முடியாது போகும்.


தன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட இறை தூதர் (ஸல்) அவர்களே கால்கள் வீங்கும் வரை நின்று வணங்கி தன் நன்றியை இறைவனுக் குத் தெரிவித்தார்கள். நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?! என்று தான் ஆயிஷாவின் கேள்விக்குப் பதில் தந்தார்கள். பாவங்கள் நிறைந்த நாமோ அவனுக்காக ஒருதுளிக் கண்ணீரையாவது சிந்தாமல் இருக்கின்றோம். அவன் தன் அடியார்களுக்காக கீழ் வானத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் செல்லாமல் இருக்கின்றோம்.


யாரோவாகிப் போனவர்களின் அழைப்புக்கெல்லாம் பதில் அளிக்கின்றோம், யாருக்காகவெல்லாமோ அழுகின்றோம். அந்த அல்லாஹ்வுக்காக அழாமல் இருக்கின்றோம்.


இறைவா! உனக்கு மாறு செய்தபோதும் உன் அன்பை நீ நிறுத்துவதில்லை. உன் நிஃமத்துக்களை துண்டிப்பதில்லை... அருளை இந்தப் பூமிக்கு அனுப்பா மல் விட்டதில்லை... நம் ஒவ்வொருவரின் ஆயுள் பாதையிலும் உன் அருள் கள் கொட்டிக் கிடக்கின்றன இருந்தாலும்... இருந்தாலும

Thursday, April 21, 2011

ஒரு முன்னாள் கிறிஸ்தவ பெண்மணியின் உருக்கமான கடிதம்!

அன்புள்ள அம்மாவுக்கு .......

அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக் கவனம் பெற்றன.


அந்த நூல்கள் அவருள் பிரள யத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.


சென்னை டெபுடி கமிஷ்னர் காமினி யின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.


இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்.
*-ஆசிரியர்.*


அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக
காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.


என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.


என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு
உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா
அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த
லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.


இப்படிக்கு..


*ரஜிதா (எ) ஹமிதா*