Friday, April 22, 2011

இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்


மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள்  இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார்.
ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப்  பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத  இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!.
இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!
"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர.

No comments:

Post a Comment

Please Don't Forget Write Your Comments