Tuesday, August 2, 2011
இஸ்லாம் குறித்து எந்த முஸ்லிமும் எனக்கு சொல்லித் தரவில்லை
-பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
"இறை மறுப்பாளர்கள் உண்மையில் இறைவனை மறுக்கவில்லை. இறைவனை அறியாமைதான் நாஸ்திகமாகும். மாற்றமாக இறைவனை நிராகரிக்க யாருக்கும் முடியாது" என்றார் பேராசிரியர் அப்துல்லாஹ்
தெமடகொட மஸ்ஜித் தவ்ஹீத் தஃவா குழுவினர் ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு கடந்த 27.06.2011 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே பேராசிரியர் அப்துல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழகத்தின் சிறந்த மனநல நிபுணரான பேராசிரியர் அப்துல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க முன்னர் பெரியார்தாஸன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.
Sunitha Williams Converted To Islam
Sunitha Converted To Islam
Sunitha the 1st Lady who went to the moon on 09/07/2011 who returned yesterday has accepted 'ISLAM'.She said that,from the moon,the whole earth looked very black and dark except 2 places which were bright and shining when i looked through the telescope.And the places were Makkah & Madina (Saudi Arabia) and at the moon all the frequencies failed but I still could hear the the sound of "Adhaan"
Subahanallah... Pls forward this to all muslims &non muslims
Monday, August 1, 2011
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்றார்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று22ஆம் வயதை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய குறித்த கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை புதிதாய் பிறந்த மகன் என பொருள்தரும் வலீத் என்ற பெயரை வைக்க தீர்மாணிதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமழான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை ராசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் மனமாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள். பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும்
Saturday, July 2, 2011
பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK
FACEBOOK கில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை தங்கள் நண்பர்களுக்கு பலர் அனுப்புவது கிடையாது.ஏன் என்றால்அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது.
சரி அவர்கள் பார்கவில்லை என்றாலும் நம் கடமை ஏன் என்றால்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட
கூறினார்கள். ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை.
ஆனால் பலர் நல்லவிடயங்களை அனுப்பது கிடையாது. அசிங்கமான சினிமா
Friday, July 1, 2011
காதல் என்றால் என்ன....? எது உண்மையான காதல்...?
உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.[Image]இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ] காதல் என்றால் என்ன?எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!திருமணத்துக்குமுன் காதலா...கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.உண்மையான காதல்உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!
அல்லாஹ்வே மிக அறிந்தவன் - Thanks to InterNet
அல்லாஹ்வே மிக அறிந்தவன் - Thanks to InterNet
Subscribe to:
Posts (Atom)




