Monday, August 1, 2011

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்றார்


தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று22ஆம் வயதை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய குறித்த கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை புதிதாய் பிறந்த மகன் என பொருள்தரும் வலீத் என்ற பெயரை வைக்க தீர்மாணிதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமழான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை ராசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் மனமாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள். பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும்

 சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர் . இதில் தென் ஆப்பிரிக்க முஸ்லிம் கிரிக்கெட் வீரர்கள் ஹாஷிம் அம்லாஇம்ரான் தாகிர் ஆகியோரின் பங்கு பங்கு நேரடியாக இல்லாவிட்டாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதி அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் முன்மாதிரி கொண்டவராக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பதுசுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல்தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான மதுபான நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றார் என்றும் 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் டில்ஷான் முஸ்லிம் தந்தைக்கும் பெளத்த தாய்க்கும் பிறந்து தனது 18 வது வயதில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிபிடத்தக்கது.
-Lanka Muslims-

No comments:

Post a Comment

Please Don't Forget Write Your Comments